27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க பொதுஜன பெரமுன எம்.பி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாகவும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

“எம்.பி. அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி AFPயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

“ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்தனர், பின்னர் அவர் தனது ரிவால்வரால் தற்கொலை செய்து கொண்டார்.”என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தலைமறைவு: வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!