25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

தம்புள்ள மேயரின் வாகனம் புரட்டி வைக்கப்பட்டது!

கொழும்பில் மஹிந்த ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையின் பின்னர் தெற்கின் பல பகுதிகளிலும் பொதுஜன பெரமுன பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் தீ வைக்கப்பட்டு வருகிறது.

கொழும்பில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு பேரணியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த தம்புள்ள நகரசபை தலைவரின் வாகனம், மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள்ளிருந்து 17 போத்தல் அரக் சாராயம் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் கூரிய கத்தி ஆகியன மீட்கப்பட்டன.

நகரசபை தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்தின் கடமை நேர பயண பதிவு புத்தகமும் அங்கு காணப்பட்டது.

வாகனத்தில் ஏழு பேர் இருந்ததாகவும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனத்தில் இருந்த சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் நகரசபை மேயர் இருந்தாரா என்பது  தெரியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

east tamil

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

Leave a Comment