Pagetamil
இலங்கை

நாளை பெரமுனவினரை சந்திக்கிறார் மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பார் என தெரிய வருகிறது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் உறுதிப்படுத்திய போதிலும், அதுகுறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நாளைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது ராஜினாமாவைத் தொடர்ந்து, அரசு செயற்பட முறையான அமைப்பு இருந்தால், பதவி விலகத் தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

அண்மையவிசேட அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் பதவி விலகினால், தற்போதைய கொந்தளிப்பை தணிக்க உதவும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஏனைய அமைச்சர்களும் கருத்து தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment