26.3 C
Jaffna
December 14, 2024
Pagetamil
மலையகம்

ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் இன்று (28) பகல் 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அக்களஞ்சியசாலை முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகி உள்ளன.

தீப்பரவல் ஊழியர்களால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக தீ கட்டுப்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment