1,000 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

Date:

பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அரச சேவை, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், கல்வி, தபால் துறை உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் பதவி விலகக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று பல பொதுத்துறை சேவைகளை முடக்குவதற்கு வழிவகுக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு எதிரே நடத்தப்படும் போராட்டங்களுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைகழக பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்விசாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சுமார் 50 சதவீத மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர், எனினும் மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்படாது. பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் கருப்பு உடை அணிவார்கள்.

இன்று நண்பகல் முதல் அனைத்து மருத்துவமனைகளுக்கு முன்பாகவும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படும்.

இதேவேளை, தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன பேரணியொன்று நண்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே நடைபெறவுள்ளது.

மேலும், தொழிற்சங்கங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் போன்ற பல இடங்களில் இருந்து பேரணியாக சென்று காலி முகத்திடல் போராட்ட தளத்தை சென்றடையும்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்