முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்மிக்க பிரசாத், அடுத்த 24 மணி நேரத்துக்கு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை வரை 38 கிலோமீற்றர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தம்மிக்க பிரசாத் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.




