‘வேலையை விட்டு நீக்கினாலும் கவலையில்லை’: காலி முகத்திடல் போராட்டத்தில் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சீருடையுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.

நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.

மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட முயன்றார், ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்