ரூ.45 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு: பேசாலை மீனவர் 3 பேர் கைது!

Date:

நெடுந்தீவு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 150 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களையும், படகையும் கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

படகு ஒன்று 68 கஞ்சா பொதிகள் அடங்கிய நான்கு சாக்கு மூட்டைகளை நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது.

எவ்வாறாயினும், மூன்று சந்தேக நபர்களுடன் படகு வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.45 மில்லியன் என நம்பப்படுகிறது.

22 மற்றும் 49 வயதுடைய சந்தேகநபர்கள் பேசாலை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

மூவரும் கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்