பாடசாலை மாணவிக்கு மதுபானம் கொடுத்து, கடத்தி சென்று, துஷ்பிரயோகம் செய்து, திருமணம் செய்ய முயன்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பென்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட மாணவன், அந்த பகுதியில் பிரபலமான பாடசாலையொன்றின் உயர்தர மாணவனாவார். சக மாணவியொருவரை 3 வருடங்களாக காதலிதது வந்துள்ளார்.
மாணவியை இரகசியமாக திருமணம் செய்ய மாணவர் விரும்பினார். மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய போதும், அவர் மறுத்து விட்டார். படித்து முடியும் வரை தன்னால் திருமணம் செய்ய முடியாதென அவர் கூறிவிட்டார்.
மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்தவர். அண்மையில் நாடு திரும்பினார். தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்தபோது, மகள் வீட்டிலிருக்கவில்லை.
தாயார் வீட்டுக்கு வந்த பின், வேறு யாருக்கும் மாணவியை திருமணம் முடித்து கொடுத்து விடுவார் என கருதிய காதலன், மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
யத்ரன்முல்ல பகுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வாகனமொன்றில் மாணவியை மீட்டனர். மீட்கப்பட்ட போது, மதுபோதையில் மாணவி சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார்.
காதலனை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில், அவரை துஷ்பிரயோகம் செய்து திருமணம் செய்ய முயன்றமை தெரிய வந்தது.