இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்ரால் வெளிநாடு செல்வதை ஏப்ரல் 18 ஆம் திகதி வரை தடை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனி டி சில்வா முன்னிலையில் இன்று பிற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




