ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இடைக்கால அமைச்சரவை என்ற பெயரில், அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. சற்றுமுன் 4 அமைச்சர்கள் பதிவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
நிதி அமைச்சர் – அலி சப்ரி
கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன
வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
அமைச்சரவை இராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை (05) பாராளுமன்றத்தின் அலுவல்கள் வழமை போன்று நடைபெற வேண்டியிருப்பதால் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஏனைய அமைச்சர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




