பல பெண்களுடன் எனக்கு தொடர்புண்டு: வாயால் வடை சுட்டு சிக்கிய நடிகர்!

Date:

நான் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என பிரபல நடிகர் ஒருவர் பேட்டியின் போது தமபட்டம் அடித்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் தனது புதிய படமான ‘ஒருத்தி’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன்.

அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன், என்றார்.

விநாயகனின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விநாயகன் கடந்த 2019ஆம் ஆண்டு பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்