திருமண நிகழ்வில் மணமகன் கழுத்து நெரித்து கொலை; மணமகளின் முன்னாள் கணவன் வெறிச்செயல்; 51 வயது புது மாப்பிள்ளையின் துயரம்!

Date:

திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறில், மணமகன் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொம்பனித்தெரு, டாசன் வீதியில் நடந்த திருமண நிகழ்விலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது.

மணமகளின் முன்னாள் கணவனனே இந்த கொலையில் ஈடுபட்டார்.

உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மொஹமட் ஷயாபிதீன் (51) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (16) காலையில் பதிவுத் திருமணம் செய்த இந்த ஜோடி, அன்று இரவே வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதன்போதே, இந்த விபரீதம் நிகழ்ந்தது.

மணமகள் மொரட்டுவை சொய்சாபுர பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண் எனவும் அவருக்கு முதல் திருமணத்தில் மூத்த மகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பியோடிய நிலையில் நேற்று காலை கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்