26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஐ.நாவிற்கு தேவையில்லாத வேலை; எங்கள் நாட்டை பார்த்துக் கொண்டிருப்பதா வேலை?: கேட்கிறது கோட்டா அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதை தொடர்ந்து கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய போது,

புதிய தீர்மானத்திற்கு சபையில் பெரும்பான்மை ஆதரவு இல்லை. இலங்கை இந்த தீர்மானத்தை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது,

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அந்த இறையாண்மையைப் பாதுகாக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் தேர்தல்கள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை எழுப்பியுள்ள கவலைகளையும் அமைச்சர் நிராகரித்தார்.

இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்ததாகவும், முன்னாள் அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஆவணத்தில் இருந்து திரும்பப் பெறுவதை ஏற்கனவே தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னைய அரசு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிது. பெரும் துரோகம் என்று கூறினார்.

எனினும், இலங்கை ஐ.நா. நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்றார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜெனிவா தீர்மானமானது பதினேழரைப் பக்கங்களைக் கொண்டது என்றும், அதில் இரண்டு பக்கங்களில் மாத்திரமே யுத்தம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏனைய 15 பக்கங்களிலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டில் இல்லாமல்போன ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, இதற்காகவா மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

நமது நாட்டுக்குள் ஆட்சி முறைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காகவா?. மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது?. இது லக்ஷ்மன் கிரியெல்லவின் பொறுப்பற்ற கருத்தாகும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.

இதற்கிடையில், குறுக்கிட்ட சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்ன, இது குறித்து தனியான விவாதம் ஒன்றைக் கோருங்கள் எனக் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்களும் மீட்பு!

Pagetamil

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒரே பார்வையில் இலங்கைப் பாதிப்பு விபரம்!

Pagetamil

Leave a Comment