கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது கூல் முட்டைகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட குழுவினர் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.




