25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 10ஆம் நாள்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒருவரை சுட்டுக்கொன்றது உக்ரைன்: தகவல்களை கசிய விட்டாராம்!

ரஷ்யாவுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைனிய அதிகாரியொருவர் உக்ரைனிய பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்ற போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதன்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா யுத்தம் தொடங்கிய பின்னர், பெலாரஷ் எல்லைப்பகுதியில் இரண்டு தரப்பும் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்புக்களில் உக்ரைன் தரப்பில் Oschadbank இன் முன்னாள் துணைத் தலைவர் டெனிஸ் கிரியேவ் கலந்து கொண்டிருந்தார்.

அவர், உக்ரைன் பற்றிய தகவல்களை ரஷ்யாவிற்கு கசியவிட்டதாக உக்ரைன அரச புலனாய்வு நிறுவனம் (SBU) தெரிவித்துள்ளது. அதற்கான “வலுவான ஆதாரம்” இருந்ததாகவும், அவரை தடுத்து வைக்க முயன்றபோது, தப்பிச் சென்றதால், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.


வெளியேற்றத்தை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: மரியுபோல் நகர அதிகாரிகள்

“பாதுகாப்பான மனிதாபிமான வழித்தடத்தை எவ்வாறு உறுதி செய்வது” என்பது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக மரியுபோல் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யப் படைகள் கடைப்பிடிக்காததால் மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரஷ்யா,அங்குள்ள மக்களை உக்ரைனிய ‘தேசியவாதிகள்’ மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களுக்கு அருகில் அமைக்கப்பட்ட இரண்டு மனிதாபிமான வழித்தடங்களை யாரும் பயன்படுத்தவில்லை என்றும், உக்ரேனிய “தேசியவாதிகள்” பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுப்பதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை உறுதிசெய்யும் விதமாக, இன்று ரெலிகிராமில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆற்றிய உரை அமைந்தது.

அதேவேளை, தமது நகரை பாதுகாக்கக்கூடிய அனைவரும் போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகர்களை காப்பாற்றக்கூடிய அனைவரும் போராட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

“ஏனென்றால், எல்லாரும் கிளம்பினால், இந்த ஊர் யாருடைய நகரம்?, நாங்கள் ஒவ்வொருவரும் எமது கடமைகளை செய்து வருகிறோம். ஒவ்வொருவரும் அதை செய்ய வேண்டும்’ என்றார்.


இந்த வார இறுதியில் உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உயரக்கூடும்!

உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை தற்போதைய 1.3 மில்லியனில் இருந்து வார இறுதிக்குள் 1.5 மில்லியனாக உயரக்கூடும் என்று ஐநா அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் கண்ட மிக வேகமாக உயரும் அகதிகள் நெருக்கடி இதுவாகும்” என்று UNHCR தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்தார்.

இந்த நேரத்தில் பெரும்பாலான அகதிகள் ஐரோப்பாவில் ஏற்கனவே வாழும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிற தொடர்புகளுடன் இணைந்திருப்பதாக கிராண்டி கூறினார், ஆனால் எதிர்கால அகதிகள் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று எச்சரித்தார்.


மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றவும், உணவு மற்றும் மருந்துகளை வழங்கும் மனிதாபிமான வழித்தடத்தை அமைப்பதற்காக தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இரண்டு நகரங்களும் ரஷ்ய இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. துண்டிக்கப்பட்ட நகரங்களிற்குள் உள்ள உக்ரைனியர்கள் மனிதாபிமான நெருக்கடியை சந்திப்பதையடுத்து, ரஷ்யா இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மார்ச் 5 ஆம் திகதி காலை 9 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என்று உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் சஸ்பில்னிடம் தெரிவித்தார்.


ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலையை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, அணுமின் நிலையத்தைத் தாக்குவது போர்க்குற்றம் என்று உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

“அணு மின் நிலையத்தைத் தாக்குவது போர்க் குற்றம். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது புடினின் ஷெல் தாக்குதல் அவரது பயங்கரவாத ஆட்சியை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது, ”என்று கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளது.


அமெரிக்க செனட் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே சூம் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பு சனிக்கிழமை  (14:30 GMT) க்கு திட்டமிடப்பட்டுள்ளது.


ரஷ்யாவின் ஊடக கட்டுப்பாட்டாளர் Roskomnadzor நாட்டில் பேஸ்புக், ருவிற்றர் சேவைகளை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளது.

அரசு ஊடகங்களுக்கு எதிரான “பாகுபாடு” தொடர்பான பல முறைப்பாடுகளையடுத்து ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்தது.


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனை ஆதரிக்குமாறு ஐரோப்பிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார். உக்ரைன் வீழ்ந்தால், ஐரோப்பா முழுவதும் வீழ்ச்சியடையும் என்று கூறினார்.

“மௌனமாக இருக்காதீர்கள். வீதிக்கு வாருங்கள், உக்ரைனுக்கு ஆதரவு தாருங்கள். ஏனெனில் இது ரஷ்ய இராணுவத்தின் மீதான வெற்றி மட்டுமல்ல, இது இருளின் மீது ஒளியின் வெற்றி, தீமையின் மீது நன்மையின் வெற்றி.

உக்ரைன் தோல்வியடைந்தால், முழு ஐரோப்பாவும் தோல்வியடையும். உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பா முழுவதும் வீழ்ந்துவிடும்” என வெள்ளிக்கிழமை மாலை உக்ரைனுக்கான சர்வதேசளவிலான பிரச்சார நிகழ்வொன்றில் பேசினார்.

உக்ரைன் போரில், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கு நாடுகள் ஓரணியாக திரண்டு பல முனை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று வில்னியஸ், பிராங்ஃபர்ட் ஆம் மெயின், திபிலிசி, பிராட்டிஸ்லாவா, ப்ராக், லியோன், பாரிஸ் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட பெரிய திரைகளில் உக்ரைன் ஜனாதிபதியின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment