நண்பகலிற்குள் டீசல் கிடைக்காவிட்டால் சேவைகள் ஸ்தம்பிதமடையும்!

Date:

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், தனியார் பஸ்களுக்கான டீசல் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற திடீர் அமைச்சரவை மாற்றத்தையடுத்து, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தற்போது சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நண்பகல் வேளையில் டீசல் விநியோகிக்கப்படாவிட்டால் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும் என விஜேரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பேருந்துகள் இரவோடு இரவாக வரிசையில் நிற்கும் அதே வேளையில் பெரும்பான்மையானவர்களால் எரிபொருளை நிரப்ப முடியவில்லை என்று அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் டீசலை பெறும் போது, தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தலைமுடியில் ‘பம்ப்’ அதிகம் எனக் கூறி 15 வயது மாணவனைக் காது மீது தாக்கிய பிரதி அதிபர் கைது!

இலங்கையின் நாத்தாண்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில், 15 வயதுடைய மாணவனை...

தலவாக்கலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 27 பேர் காயம்!

நுவரெலியா, தலவாக்கலை – நானுஓயா சுற்றுவட்டப் பாதையின் டெஸ்போட் பகுதியில் இன்று...

உலகளாவிய ரீதியில் 7 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள்! மைக்ரோசொப்ட் 365 சேவை பாரிய முடக்கம்!

நவீன உலகில் அலுவலகப் பணிகள், அரச நிர்வாகம் மற்றும் அத்தியாவசிய பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்