28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 4ஆம் நாள்: உக்ரைனின் ‘கனவு விமானத்தை’ தகர்த்தது ரஷ்யா!

♦ரஷ்யாவுடன் முன்நிபந்தனையின்றி பெலாரஸ் எல்லையில் பேச தயாரென உக்ரைன் அறிவிப்பு.

♦அணுசக்தி தடுப்பு படைகளை தயார் நிலையில் இருக்கும்படி புடின் உத்தரவு

♦ரஷ்யாவின் நடவடிக்கையை ‘போர்’ என முதன்முதலில் துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் கருங்கடல் அணுகலை தடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

♦இதுவரை 4,300 ரஷ்யப் படைகளை கொன்றதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

♦உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் இற்குள் ரஷ்யப்படைகள் புகுந்தன.

♦பெலாரஸிலிருந்து ஏவப்பட்ட ஃக்ரூஸ் ஏவுகணையை அழித்து விட்டதாக உக்ரைன் கூறுகிறது.


உக்ரைனில் தயாரிக்கப்பட்ட  உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ்- 225 மிரியா (Antonov-225 Mriya) தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள ஒரு விமானநிலையத்தின் ரஷ்யா நடத்திய தாக்குதலில் எரிந்தது.

உக்ரைன் அரச ஆயுத உற்பத்தியாளரான Ukroboronprom இதனை தெரிவித்துள்ளது.

 “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனின் ‘கனவு விமானமான’  அன்ரனோவ் -225 மிரியாவை அழித்தார்கள். இது கியிவ் அருகே ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமானநிலையத்தில் நடந்தது, ”என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமானத்தை மறுசீரமைக்க 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும் என்றும் நீண்ட காலம் எடுக்கும் என்றும் அது கூறியது.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “ஒரு வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய நாடு” என்ற உக்ரைனின் கனவை ரஷ்யா “ஒருபோதும் அழிக்க முடியாது” என்றார்.


‘எங்கள் பிரதேசத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்’: உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்ட பிறகு, உக்ரைன் “ஒரு அங்குல … பிரதேசத்தை விட்டுக்கொடுக்காது” என வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

 “ரஷ்யா என்ன சொல்ல விரும்புகிறதோ அதைக் கேட்க நாங்கள் அங்கு [பேச்சுவார்த்தைக்கு] செல்கிறோம். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய பூர்வாங்க உடன்பாடு எதுவும் இல்லாமல் நாங்கள் செல்கிறோம். இந்த யுத்தம் மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை கேட்கவும் கூறவும் நாங்கள் அங்கு செல்கிறோம், ”என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஒரு நேரடி வீடியோ உரையில் கூறினார்.

“பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருணத்திற்கு இடையில், உக்ரைனுக்கு எதிராக பெலாரஷ்ய இராணுவப் படை எதுவும் பயன்படுத்தப்படாது என்று பெலாரஷ்ய ஜனாதபதி லுகாஷென்கோ ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் உறுதியளித்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.

“லுகாஷென்கோ தனது வார்த்தையில் உறுதியாக இருப்பார் என்று நாங்கள் நம்பலாம். இப்போது மற்றும் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருணத்திற்கு இடையில், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர முயற்சித்தால் தோற்கடிக்க, எங்கள் நாட்டை கடுமையாகப் பாதுகாப்போம்.

அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பிரதேசங்களில் அவர்களைத் தொடர்ந்து தோற்கடிப்போம் – எங்கள் நாட்டை முழுமையாகப் பாதுகாக்கும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படிப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை, இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு சமாதானமாக இருந்தால், அதை வரவேற்க வேண்டும்.

ஆனால் நான் அதை மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன், நாங்கள் எங்கள் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.” என்றார்.


ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன் இன்று உறுதி செய்துள்ளது.

பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடனான தொலைபேசி உரையாடலின் போது, உக்ரேனிய தூதுக்குழு ரஷ்ய தூதுக்குழுவை உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் முன்நிபந்தனையின்றி சந்திக்கும் என்று ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.


ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு புடின் உத்தரவிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நேட்டோ நாடுகளின் “ஆக்கிரமிப்பு அறிக்கைகள்” மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்தார்.


கார்சிவ் நகரம் மீண்டும் உக்ரைன் வசம்!

கார்கிவ் நகரத்தை தமது முழு கட்டுப்பாட்டில் மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கார்கிவ் மாகாணத்தின் ஆளுநர் ஓலே சினெகுபோவ் இதனை அறிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனின் பிராந்தியத் தலைநகரான கார்கிவ், அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.

அதற்குள் ரஷ்யப்படைகள் இன்று புகுந்தன.

எனினும், கூறுகிறார். இரவோடு இரவாக நடந்த கடும் சண்டைக்குப் பிறகு, மீண்டும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

“ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் செயல்படுகின்றன, மேலும் நகரம் எதிரிகளிடமிருந்து முற்றிலும் சுத்தப்படுத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

அங்கு உக்ரைன் படையினர் நிலைகொண்டுள்ள படங்கள், அழிக்கப்பட்ட ரஷ்ய வாகனங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.


பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த தயாரா என்பதை இன்று (27) 3 மணிக்குள் உக்ரைன் தீர்மானித்து அறிவிக்க வேண்டுமென ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.

எனினும், தம் மீது தாக்குதல் நடத்த உடந்தையாக இருந்த பெலாரஸில் சந்திக்க உக்ரைன் மறுத்துள்ளது. “ஏவுகணைகள் ஏவப்படாத” நாட்டில் மட்டுமே சந்திக்க தயாரேன்றும், ரஷ்யா உக்ரைனில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் வரை பேச்சுவார்த்தை இல்லையென்றும் அறிவித்துள்ளது.


உக்ரைனுடன் பேச்சு நடத்த தயாரென ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால் அந்த பேச்சு பெலாரஷிலேயே நடக்க வேண்டுமென குறிப்பிட்டது.

பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன் அரசு ரஷ்யாவுடன் அமர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். 

எனினும், அமைதிப் பேச்சுக்கு நாம் தயார், ஆனால் பெலாரஷில் பேச்சுக்கு வர மாட்டோமென உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ரஷ்யாவின் தாக்குதலை ‘போர்’ என துருக்கி முதன்முதலில் அழைத்துள்ளது.

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பை ஒரு “போர்” என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது.

இது மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலுக்கு ரஷ்ய கடற்படைப் பாதையை கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்த வழி வகுக்கும்.

1936 மாண்ட்ரூக்ஸ் உடன்படிக்கையின் கீழ், மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலை இணைக்கும் டார்டனெல்லெஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்தியின் மீது துருக்கி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

மேலும் போர்க்காலத்தில் அல்லது அச்சுறுத்தப்பட்டால் போர்க்கப்பல்கள் செல்வதைக் கட்டுப்படுத்தலாம்.

அதன் மேற்கத்திய உறுதிப்பாடுகள் மற்றும் மாஸ்கோவுடனான நெருங்கிய உறவுகளை சமநிலைப்படுத்தி, இதுவரை, ரஷ்ய தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மட்டும் கூற வந்தது.

 ஆனால் இது வரை நிலைமையை ஒரு போர் என்று விவரிக்கவில்லை. “உக்ரைன் போரின் நான்காவது நாளில், ரஷ்ய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் ஜனாதிபதி எர்டோகனின் அழைப்பை நாங்கள் மீண்டும் கூறுகிறோம்” என்று ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் ட்விட்டரில் தெரிவித்தார்.

உக்ரைனின் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்ததும், ரஷ்யாவின் கருங்கடல் அணுகலை தடுக்க, பொஸ்பரஸ் கால்வாயை மூடுமாறு உக்ரைன் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


4,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த சண்டையில் சுமார் 4,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சரியான எண்ணிக்கை தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் உக்ரேனியப் படைகள் சுமார் 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகொப்டர்களை அழித்ததாகவும் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் ஹன்னா மல்யார் கூறினார்.

ஆனால் இந்த எண்ணிக்கை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டதல்ல.


200,000க்கும் அதிகமான உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐநா அகதிகள் நிறுவனம் (UNHCR) கூறுகிறது.

மொஸ்கோ அதன் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது, மேலும் விரைவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெலாரஸ் நாட்டிலிருந்து கீவ் மீது ஏவப்பட்ட ஃக்ரூஸ் ஏவுகணையை உக்ரைன் ஏவுகணை தடுப்பு அமைப்பு தடுத்து அழித்து விட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.


தலைநகர் கீவ் இலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புச்சா நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்து, கடும் சண்டை நடந்து வருகிறது.


உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்திற்குள் ரஷ்யப்படை!

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துவிட்டன. இது உக்ரைனின் வடகிழக்குப் பகுதி. இதனை உக்ரைனின் உள்துறை அமைச்சரான ஆன்டன் ஹெராஸ்சென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

கார்கிவ் நகரில் பல முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அங்கிருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மாணவ, மாணவிகள் இந்திய அரசு மிகவும் மோசமான சூழலில் சிக்கியுள்ள தங்களை முதலில் மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் இப்பொழுதும் தெருச்சண்டை நடந்து வருவதாகவும், பொதுமக்களை வீதிக்கு வர வேண்டாமென்றும் நகர நிர்வாகம் தனது பேஸ்புக்கில் கோரியுள்ளது.

அத்துடன் நகரில் ரஷ்ய கவச வாகனங்கள் செல்லும் படங்களையும், சில ரஷ்ய டாங்கிகள் எரியும் படங்களையும் பதிவிட்டுள்ளது.


கிவ்வுக்கு வெளியே 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாசில்கிவ்டி  நகரத்தை கைப்பற்ற ரஷ்யப் படைகள் பலத்த தாக்குதலை நடத்தி வருகின்றன. அந்த நகரத்திக் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதை நகர மேயர் உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே தலைநகரை அண்மித்திருந்த ரஷ்யப்படைகள் பின்தள்ளப்பட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்ய எதிர்பாராத எதிர்ப்பை சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


உக்ரேனிய இராணுவம் செர்னிஹிவ் பிராந்தியத்தில் 56 ரஷ்ய டாங்கிகள் கொண்ட தொடரணியை அழித்துள்ளதாக செச்செனிய படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

போரோடியங்கா, புச்சா மற்றும் வைஷ்ஹோரோட் எல்லையில் உக்ரேனிய இராணுவம் ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தியதாகவும் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,

பெல்கோரோடில் இருந்து ஸ்டாரோபில்ஸ்க் வரை முன்னேறி வரும் ரஷ்யர்கள் ஸ்லோபோஜான்ஸ்கி  மாவட்டத்தில் குடியேற்றங்களை தொடர்ந்து கைப்பற்ற முயற்சிக்கின்றனர். டினிப்ரோ ஆற்றின் இடது கரையில் ரஷ்ய துருப்புக்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதைத் தடுக்க கடுமையான போர்கள் நடைபெறுகின்றன.

துப்பாக்கி வழங்கப்பட்ட உக்ரைனிய வயோதிபர்

டாங்கி தொடரணி அழிக்கப்பட்ட தாக்குதலில், ரஷ்யாவின்141 வது மோட்டார் படைப்பிரிவின் தளபதி ஜெனரல் மாகோமட் துஷாயேவ் கொல்லப்பட்டார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களிற்கு உதவியாக, உக்ரைனின் தெருக்களிலும் கட்டிடங்களிலும் குறிகளை வரையும் வெளி நபர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக விசாரிக்கப்படுவார்கள் என உக்ரைன் அறிவித்துள்ளது.

இந்த குற்றத்திற்காக 12 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கிய்வ் நகர சபை தெரிவித்துள்ளது.


உக்ரைனில் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு இணைய அணுகலை வழங்குகிறது, இப்போது உக்ரைனில் செயலில் உள்ளது.

உக்ரைனின் டிஜிட்டல் மாற்றம் அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவுக்கு ஒரு ட்வீட்டில் இதனை கூறினார்.

சாட்டிலைட் டெர்மினல்கள் இப்போது உக்ரைனுக்குச் செல்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனின் இணையத்தை சீர்குலைத்திருந்த நிலையில், உக்ரைனியர்களின் இணைய அணுகலை இது இலகுபடுத்தும்.


ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போரில் ஜேர்மனியின் இராணுவம், உக்ரைனுக்கு உதவ 1,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும், 500 “ஸ்டிங்கர்” வகை தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகளையும் வழங்கும் என்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள், “உக்ரைனுக்கு கூடிய விரைவில் வழங்கப்படும்” என்று அரசாங்க அறிக்கை கூறியது.


ரஷ்யா மீது விதிக்கப்பட்ட நிதித் தடைகளுக்கு உக்ரைன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

போலந்திலுள்ள ரஷ்யத் தூதரகத்தின் வெளிப்புற காட்சி

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட சமீபத்திய சுற்று நிதித் தடைகளுக்கு உக்ரைன் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நண்பர்களுக்கு நன்றி … SWIFT இலிருந்து பல ரஷ்ய வங்கிகளை அகற்றுவதற்கான அர்ப்பணிப்புக்காக” மற்றும் “ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கியதற்காக,” அவர் கூறினார்.


இதையும் பாருங்கள்-  https://youtu.be/L3z-wl_rF3Y


SWIFT தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக பிரிட்டனும் நட்பு நாடுகளும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

SWIFT சர்வதேச கட்டண முறைக்கான வங்கிகளின் அணுகலைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவை உலகளாவிய நிதி அமைப்பிலிருந்து வெளியேற்ற பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் “தீர்மானமான நடவடிக்கை” எடுத்துள்ளதாகக் கூறினார்.

“ரஷ்ய வங்கிகளை SWIFT இலிருந்து வெளியேற்றுவதற்கான முக்கியமான முதல் படி உட்பட, உலகளாவிய நிதி அமைப்பிலிருந்து ரஷ்யாவை மூடுவதற்கு எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் இன்றிரவு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று ஜோன்சன் ட்விட்டரில் கூறினார்.

“புடின் தனது ஆக்கிரமிப்புக்கான விலையை செலுத்துவதை உறுதிசெய்ய நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.”என்றார்.


பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பெலாரஸில் இருந்து “ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவதை” உறுதிப்படுத்துமாறு பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் கேட்டுக் கொண்டதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பெலாரஸ் தலைவரிடம் “உக்ரேனிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையடுத்து, அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும், முக்கிய உலகளாவிய கட்டண முறையிலிருந்து அதைத் துண்டிக்க அழைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சொசைட்டி ஃபோர் வேர்ல்ட்வைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் (SWIFT) நெட்வொர்க்கில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றுவது, உலகின் பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் திறனை முடக்கி அதன் பொருளாதாரத்திற்கு பெரும் அடியை ஏற்படுத்தும்.

ஆனால் வியாழன் அன்று, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவை SWIFT இலிருந்து துண்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்தன.

ஸ்விஃப்ட் (SWIFT)என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

SWIFT என்பது பணப் பரிமாற்றம் மற்றும் பிற பரிவர்த்தனைகள் பற்றிய பாதுகாப்பான செய்திகளை அனுப்ப வங்கிகளால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் ஆகும்.

கிட்டத்தட்ட 200 நாடுகளில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் SWIFT ஐப் பயன்படுத்துகின்றன, இது சர்வதேச நிதி பரிமாற்ற அமைப்பின் முதுகெலும்பாக உள்ளது.

SWIFT என்பது பெல்ஜிய சட்டத்தின் கீழ் ஒரு கூட்டுறவு நிறுவனமாகும். அதன் இணையதளத்தில், “இது உலகம் முழுவதும் உள்ள சுமார் 3,500 நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் பங்குதாரர்களால் [நிதி நிறுவனங்கள்] சொந்தமானது மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது” என்று கூறுகிறது.

இந்த அமைப்பு G10 மத்திய வங்கிகளாலும், ஐரோப்பிய மத்திய வங்கியாலும் கண்காணிக்கப்படுகிறது, அதன் முன்னணி மேற்பார்வையாளர் நஷனல் பேங்க் ஒஃப் பெல்ஜியம்.

ரஷியன் நஷனல் ஸ்விஃப்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது அதிக பயனர்களைக் கொண்டுள்ளது, சுமார் 300 ரஷ்ய நிதி நிறுவனங்கள் அமைப்பைச் சேர்ந்தவை.

ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை SWIFT இல் உறுப்பினர்களாக உள்ளன. ஹொங்கொங்கில் உள்ள நாடிக்சிஸில் உள்ள ஆசிய பசிபிக் பகுதிக்கான தலைமைப் பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா ஹெர்ரெரோ, ரஷ்யாவை SWIFT இலிருந்து தடை செய்வது நாட்டிற்கு கடுமையான அடியாகும் என்றார்.

எனினும், மறுவளமாக ரஷ்யாவின் தாது, எரிவாயுவை நம்பியுள்ள மேற்கு நாடுகளிற்கும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்யா மீதான தடைகள் தமக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நெதர்லாந்து பகிரங்கமாக தெரிவித்துள்ளது.


ஜெர்மனியும் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யாவை SWIFT இலிருந்து அகற்ற ஒப்புக்கொள்கின்றன

ஜேர்மனியும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யாவை SWIFT உலகளாவிய கட்டண முறையிலிருந்து அகற்ற ஒப்புக்கொண்டுள்ளன.

ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்றாவது தடைகள் தொகுப்பில் கூறினார்.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகள், ரூபிளுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யாவின் மத்திய வங்கியின் திறனைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

அவர்கள் பணக்கார ரஷ்யர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான “தங்க பாஸ்போர்ட்களை” முடிவுக்குக் கொண்டு வருவார்கள்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போரை ஆதரிக்கும் ரஷ்யாவிலும் பிற இடங்களிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைப்பார்கள் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வராத பட்சத்தில், ஐரோப்பிய அமைதி ஒழுங்கின் மீது ரஷ்யா மேலும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அந்த நாடுகள் வலியுறுத்தின,” என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

Leave a Comment