ராகு – கேது பெயர்ச்சி: 2022 பொதுப்பலன்கள்!

Date:

குருப் பெயர்ச்சிக்கு முன்னதாக மற்றொரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி, 2022 மார்ச் மாதத்தில் நிகழ்கிறது. ராகு – கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்களை ஜோதிடர் கே.எஸ்.சேதுராமன் கணித்துள்ளார்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி, நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 07ஆம் திகதி – 21.03.2022 திங்கள்கிழமை – சுக்லபக்ஷ சதுர்த்தி – ஸ்வாதி நக்ஷத்ரம் – வ்யாகாத நாமயோகம் – பவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 22.12க்கு (உதயாதி மாலை மணி 03.13க்கு) கடக லக்னத்தில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் சிசிரரிது பங்குனி மாதம் 07ஆம் திகதி – 21.03.2022 திங்கள்கிழமை – சுக்லபக்ஷ சதுர்த்தி – ஸ்வாதி நக்ஷத்ரம் – வ்யாகாத நாமயோகம் – பவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 22.12க்கு (உதயாதி மாலை மணி 03.13க்கு) கடக லக்னத்தில் கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம் பங்குனி மாத 29 ஆம் திகதி ஏப்ரல் 12 ஆம் திகதி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு கேது – ஓர் அறிமுகம்

ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

அறிவியல் பூர்வமாக நமது டி.என்.ஏ தான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு – கேது என்னும் கிரகங்கள் டி.என்.ஏ போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் – கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர்.

ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் – பிதுர் தோஷம் – புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி – ஞானம் – திருமணம் – மக்கட்பேறு – வேலை – வெளிநாடு சம்பாத்தியம் – கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

பொதுப் பலன்கள்

பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். கிருத்திகை நக்ஷத்ரத்தில் ராகுவும் – விசாக நக்ஷத்ரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது சூரியனுடைய நக்ஷத்ரம் – செவ்வாய் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது குருவினுடைய நக்ஷத்ரம் – சுக்கிரன் ராசியில் இருக்கிறார்.

அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரிசெய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் செவ்வாய் வீட்டில் இருக்கிறது. சனியின் பார்வை கேதுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும்.

அதே வேளையில் சுக்கிரனின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் பொருளாதாரம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகமாவதும் அதைத் தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும். அதே வேளையில் ராகுவிற்கு கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் – கோவில் சம்பந்தமான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும்.

ராகு – கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் – நீர் – காற்று – ஆகாயம் – நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.

பொது பரிகாரம்

ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் – கேதுவிற்கு விநாயகர் – ஆஞ்சனேயரையும் வணங்குவது நன்மை தரும்.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்