நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 59,949 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, 43,013 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
881 பேருக்கு சினோபார்ம் முதலாவது தடுப்பூசியும், 1,607 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
ஃபைசர் முதலாவது தடுப்பூசி 4,235 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 10,213 பேருக்கும் செலுத்தப்பட்டது.
இதுவரை 6,862,625 பேர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1