நன்கொடை பெட்டியிலிருந்து ரூ.1,408 திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Date:

1408 ரூபாய் திருடிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியிலிருந்து இந்த பணத்தை அவர் திருடியிருந்தார் .

சந்தேக நபர் இராஜதந்திர பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பணத்தை திருடுவதற்காக நன்கொடைப் பெட்டியை உடைத்த சந்தேகநபரை பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் கல்கிசை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மொரட்டுவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட வயோதிபர்களிற்கு நன்கொடையளிக்க பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியில் இருந்த பணத்தை சந்தேக நபர் திருடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்