Pagetamil
குற்றம்

காதலியுடன் தங்கியிருந்த முன்னாள் காதலன்; வீடு புகுந்து கழுத்தறுத்துக் கொன்ற இந்நாள் காதலன்: விடலைக்காதல் விபரீதமானது!

தனது காதலியுடன் உடலுறவு கொண்ட முன்னாள் காதலனை கழுத்தறுத்து கொலை செய்த, தற்போதைய காதலன், கடவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை, அன்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்ணாடியால் கழுத்தறுக்கப்பட்ட 20 வயதான இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) காலை இந்த சம்பவம் நடந்தது.

கோனஹேன பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞனே கைதானார். 19 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து, கொலைக்கு பயன்படுத்திய கண்ணாடித் துண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியொருவர் குறித்த வீட்டு அறையில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

அந்த அறையில் சிறுமியும் அவரது முன்னாள் காதலனும் உடலுறவில் ஈடுபட்டதை கண்ணுற்ற தற்போதைய காதலன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடவத்தை கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கடவத்தையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் தனது முன்னாள் காதலனைக் கண்டுள்ளார். இதன்போது இருவரும் பேசி, பழசையெல்லாம் மறந்து, மீண்டும் காதலிக்கலாமென முடிவெடுத்தனர்.

தற்போதைய காதலனை கழற்றி விட்டு, முன்னாள் காதலனுடன் உறவை ஆரம்பித்த சிறுமி, அவரை தனது வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் தற்போதைய அதிகாலை 3 மணியளவில் காதலி தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு சிறுமியும், முன்னாள் காதலனும் உடலுறவில் ஈடுபட்டதை பார்த்து கோபமடைந்து, அறைக்கதவை திறக்கும்படி கூறினார். எனினும், அறைக்கதவை அவர்கள் திறக்கவில்லை. இதையடுத்து, கண்ணாடி யன்னலை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த காதலன், அங்கிருந்த இளைஞனை தாக்கி, அவரது கழுத்தை அறுத்துள்ளார்.

அந்த சிறுமி, சிறுவர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி வந்து வாடகை அறையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

Leave a Comment