தொல்லை கொடுத்த கணவரை கோடாரியால் கொத்திக் கொன்ற மனைவி!

Date:

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு மனைவியின் தாக்குதலிற்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்