முல்லைத்தீவில் கொடூர விபத்து: 2 இளைஞர்கள் பலி; ஒருவர் படுகாயம் (PHOTOS)

Date:

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று (01)மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதுள்ளனர். இவர்களில் இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .

-கே .குமணன்-

spot_imgspot_img
Previous article
Next article

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்