சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தனவின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உத்தியோக பூர்வ இல்லத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், நீதிபதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்ஸி டி மெல், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் சட்டமா அதிபர் தப்புல த லிவேராவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்