விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பரதன் காலமானார்!

Date:

விடுதலைப் புலிகளின் நிதர்சனம் அமைப்பின் முதலாவது பொறுப்பாளராக செயற்பட்ட பரதன் காலமாகியுள்ளார்.

தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் அவர், நேற்று (18) மாரடைப்பினால் காலமானார்.

இவர், பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக செயற்பட்டார்.

நிதர்சனம் தொலைக்காட்சி, புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தா இவரே.

செய்தி சஞ்சிகை, தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலியென புலிகள் அமைப்பின் ஒளி,ஒலி ஊடகப்பரப்பின் ஆரம்பவிதையாக இவரே செயற்பட்டார்.

நிதர்சனம் நிறுவனத்தின் மூலம் திரைப்படம், குறும்படங்களையும் உருவாக்கினார்.

எனினும், 1990களின் தொடக்கத்தில் புலிகள் அமைப்பிலிருந்து விலகி, சொந்த வாழ்க்கைக்கு திரும்பினார். பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து, லண்டனில் மூன்றாவது கண் என்ற ஊடக நிறுவனத்தை நடாத்தி வந்தவர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்