24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

‘பிரபாகரன் ஓடிய ஜீப் என்னிடமுள்ளது’: மஹரகம வாசி சொல்வது உண்மையா?… மிளகாய் அரைத்தார்களா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப்பை தான் வைத்திருப்பதாக, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் என கூறி அவரது தலையில் மிளகாய் அரைத்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (50) என்பவரே தற்போது ஜீப்பை பயன்படுத்தி வருகின்றார்.

1942 ஆம் ஆண்டு கனடாவில் இந்த வகை ஜீப்கள் தயாரிக்கப்பட்டன. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க இராணுவத்தினரால் இந்த ஜீப்கள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இலங்கையில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினரால் இந்த ஜீப் பயன்படுத்தப்பட்டது. தமது பாவனைக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் அமெரிக்க படைகள் வெளியேறிய போது ஜீப் கைவிடப்பட்டிருந்தது.

1947 இல் இந்த வாகனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டது. சாமுவேல் சிங்கத்தம்பி என்பவர் இந்த ஜீப்பை முதன்முதலில் சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்த வாகனம் ஆரம்பம் முதல் வட மாகாணத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் மூன்று உரிமையாளர்களுக்கு சொந்தமானது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இதன் அசல் உரிமையாளர் சாமுவேல் சிங்கத்தம்பி. இரண்டாவது உரிமையாளர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர், அவரிடமிருந்து வாகனம் அவரது மகனுக்கு மாற்றப்பட்டுள்ளது. 1979 இல், ஆயுத இயக்கமொன்றினால் வாகனம் கடத்தப்பட்டது.

யுத்தம் முடிந்த பின்னர் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒரு பகுதி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால் வாகனத்தின் மூன்றாவது உரிமையாளர் ஜீப்பை எடுத்துச் செல்லவில்லை.

2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது.

வாகனம் தொடர்பில் கராஜின் உரிமையாளரின் மகன் கபில புலத்கே அறிந்து, மூன்றாவது உரிமையாளரிடமிருந்து முறைப்படி வாங்கியுள்ளார்.

இந்த வாகனம் கொழும்பு மஹரகமவுக்கு கொண்டு வரப்பட்டு மஹரகம நந்த குமார கராஜில் திருத்தப்பட்டது முதலில் இந்த வாகனம் லொறி என கூறப்பட்ட நிலையில் பின்னர் குறித்த வாகனம் லொறி அல்ல ஜீப் எனத் தெரியவந்துள்ளது. அதன் பிறகுதான் புனரமைப்பு செய்யப்பட்டது என்று புலத்கே கூறினார்.

இந்த ஜீப்பை பிரபாகரனும், புலிகளின் முக்கிய தலைவர்களும் பயன்படுத்தியதாக, பருத்தித்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள் புலத்கே புளுகத்துடன் இருக்கிறார். ஆனால் அந்த தகவல் உண்மையானதா பொய்யானதா என்பதற்கு எந்த உறுதிப்படுத்தலும் கிடையாது. பருத்தித்துறையை சேர்ந்த சிலர் சொல்லியுள்ளனர். அவ்வளவுதான்.

புலத்கேயின் புளுகத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து வருகிறார்கள். பிரபாகரனின் ஜீப் என யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment