முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டர்.
சிறுமியின் உடலில் ஆடைகள் களையப்பட்டு, உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறது.
கடந்த 15 ஆம் திகதி சிறுமி தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் உள்ள அனைவரும் திருகோணமலைக்கு சென்றிருந்த காரணத்தால் வீட்டில் ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை காலை 06.30 மணிக்கு நிறுத்துவதற்காக சென்றிருந்த நிலையிலேயே வீட்டுக்கு திரும்பியிருக்கவில்லை என தாயார் தெரிவித்தார்.
மகள் வீடு திரும்பாததால் எல்லா இடமும் தேடுதலில் ஈடுபட்டிருந்த தாயார் மாலை 02 மணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார் .
கடந்த நான்குநாடகளாக அப்பகுதி மக்கள் மற்றும் இராணுவத்தினர் போலீசார் இணைந்து பல இடங்களில் தேடுதலில் ஈடுபட்டிருந்த போதிலும் சிறுமி தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.
இந்த நிலையில் சிறுமி இன்று சடலமாக மீட்க்கபட்டிருந்த வளவில் நேற்றையதினம் மாலை தேடுதல் மேற்கொண்டபோது அங்கு சடலம் எதுவும் காணப்படாத நிலையில் இன்று காலை அருகாமையில் உள்ள வீட்டின் பெண்ணொருவர் கோழிகளை தேடி குறித்த வளவுக்குள் சென்ற நிலையிலேயே சடலத்தை கண்டு சிறுமியின் வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த சிறுமி காணாமல் போன தினத்தில் கழுத்த்தில் தங்க சங்கிலி ஒன்றினை அணிந்திருந்த்துடன் காதில் தோடும் அணிந்திருந்ததாக சிறுமியின் தாயார் தெரிவித்தார். ஆனால் சிறுமியின் சடலம் அலங்கோலமான நிலையில் ஆடைகள் விலக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் காணப்படுள்ளது.
சடலம் மீட்க பட்டிருந்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் கொண்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வின் பின்னர் வேறு இடத்தில்வைத்து கொலை செய்யப்பட்டு ஆட்கள் இல்லாத வளவில் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.