ஒரே பாடசாலையில் 71 மாணவர்களிற்கு பார்வைக் குறைபாடு: தொலைபேசி பாவனை காரணமா?

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16.12.2021 அன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள் சமுகமளித்துள்ளனர்.

இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 71 மாணவர்களுக்கு கண் பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிக தொலைபேசி பாவனை காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்ததினையடுத்து 71 மாணவர்களும் இன்றையதினம் மேலதி் கண்பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்