வவுனியா, புளியங்குளம் பகுதியில் டிப்பர் – துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் சென்றவரை அதே வழியில் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியினுள் துவிச்சக்கரவண்டி சிக்குண்டதுடன், துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுடன் உயிர்தப்பினார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




