இனி வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை: அரபு எமிரேட்ஸில் அதிரடி திட்டம்!

Date:

அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, டுபாய், அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022, ஜனவரி 1ஆம் திகதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது.

அதன்படி, திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட இரண்டரை நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமைகளில், ஊழியர்கள் நெகிழ்வான வேலை அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பங்களைத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவில் உள்ள வாரத்தில் ஐந்து வேலை நாள் நடைமுறையை விட,  குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்