யப்னா கிங்ஸ் முதல் வெற்றி!

Date:

இன்று மாலை நடைபெற்ற 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, யப்னா கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெயன்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அந்த அணி 19 ஓவரில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தம்புள்ளை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 23 ஓட்டங்களையும், சமிக்க கருணாரத்ன 18 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 12.3 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

இதில் அவிஷ்க பெர்ணான்டோ 33 ஓட்டங்களையும், டொம் கோலர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீக்ஷன ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்