25.8 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

வாக்குரிமை விழிப்பூட்டல் கலந்துரையாடல்!

வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரச அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயாக்க, தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹமட் , பத்திரண,திவாரட்ண, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இங்கே தெரிவிக்கப்பட்டதுடன், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கருத்துக்களும் கேட்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

இதன் போது இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மக்கள் வாக்களிப்பது தொடர்பில் கோரவில்லை என்றும் அது தொடர்பில் அரசியல்வாதிகள் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு வாக்குரிமைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் என்பது நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தேர்தலை புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ அல்லது திருத்தங்கள் திருத்தங்களின் ஊடாகவோ விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

east tamil

77வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

east tamil

மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் விநியோகம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

east tamil

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒத்துழைக்க அழைப்பு

east tamil

பலப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு தத்தெடுப்புக்கான சட்ட நடைமுறைகள்

east tamil

Leave a Comment