நடிகை சுரபி எந்த லெவலிலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை.
எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.
சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.