மீண்டும் தள்ளிப் போன ‘தள்ளிப் போகாதே’ ரிலீஸ்

Date:

பலமுறை தள்ளிவைக்கப்பட்ட ‘தள்ளிப் போகாதே’ படம் தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப் போகாதே’. இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

ஏற்கெனவே பலமுறை வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் இப்படம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின்னர் டிசம்பர் 3 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் திகதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்