நேற்றிரவு இலுக்மோதர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காணாமல் போன 39 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கண்டி – குருதெனிய வீதியில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குருதெனிய பிரதேசவாசி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதன்போது வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பயணிகள் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல் போன நபரையும் வாகனத்தையும் தேடும் நடவடிக்கையை இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சடலம் மற்றும் வாகனம் மீட்கப்பட்டது.




