மேலும் 27 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 14,305 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், 27 மரணங்களும் நவம்பர் 27 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
14 ஆண்களும் 13 பெண்களும் மரணித்துள்ளனர்.
11 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
30 முதல் 59 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மரணித்துள்ளனர்.




