25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

மாவீரர்நாள் அஞ்சலி தடைக்கு எதிரான மனு நிராகரிப்பு!

மாவீரர்நாள் தடையுத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் நிராகரித்தார்.

மாவீரர்நாள் அனுட்டிக்க தடைவிதிக்க கோரி, கடந்த 19ஆம் திகதி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கத்தின் முன் யாழ்ப்பாணம் பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, மாவீரர்தின அனுட்டிப்பிற்கு பலருக்கு தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். கட்டளைகள் பிரதிவாதிகளிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று (24) காலை சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தன் மீதான தடையை நீக்க அதில் கோரியிருந்தார்.

இதையடுத்து, மதியம் 2 மணிக்கு முன்னிலையாகி பதிலளிக்கும்படி, யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பதில் நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகி சமர்ப்பணம் செய்தனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் சமர்ப்பணம் செய்தார்.

பொலிசார் மனுத்தாக்கல் செய்த போது, பிரதிவாதிகளை அழைக்காமலே ஒரு முக கட்டளை வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான 3 சட்டத்தரணிகளும் கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் சமர்ப்பணம் செய்தனர்.

பொலிசார் தரப்பில் சுமார் 30 நிமிடங்கள் அளவில் பதில் வழங்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் மிக சுருக்கமாக, 3 வரிகளில் தீர்ப்பளித்தார்.

‘நான் வழங்கியிருப்பது தற்காலிக கட்டளையல்ல. நிரந்தர கட்டளை. நீங்கள் விரும்பினால் மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்’ என தீர்ப்பளித்தார்.

யாழ் மாவட்டத்தில் ஏனைய நீதிமன்றங்களான சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன், பருத்தித்துறை நீதிபதி கிரிஷாந்தன், மல்லாகம் நீதிபதி ஏ.ஆனந்தராஜா, ஊர்காவற்துறை நீதிபதி கஜநிதிபாலன் ஆகியோர் மாவீரர்நாள் தடைகோரிய மனுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

Leave a Comment