ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர் யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனந்தி சசிதரன் கருத்து தெரிவித்தபோது-
ஈழத்தமிழருக்கு இறை ஆசி வேண்டி இந்த யாகம் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் எதிரிகளால் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்கு முறைகள் தீரவேண்டும். உண்மையில் எமது மக்களுக்கு இப்போது தேவை இறை நீதி. புனிதமான இந்த மாதத்தில், இந்த வாரத்தில், நாங்கள் சத்துரு யாகத்தை நடாத்தியிருக்கின்றோம். தொடர்சியாகவும் இவ்வாறு யாகத்தை பல ஆலயங்களிலும் நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1