23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

10 மாவட்டங்களிற்கு சிவப்பு எச்சரிக்கை!

பத்து மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் தென் கிழக்கில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக அதிக மழை பெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கயிருந்த 2வது வெளிநாட்டு பெண்ணும் மரணம்!

Pagetamil

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

Leave a Comment