அடுத்த 4 வருடங்களுக்கு நிம்மதியாக உறங்க விருப்பமா?: அமெரிக்காவிற்கு கிம் சகோதரி எச்சரிக்கை!விற்கு வட

Date:

நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு வருடங்களில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்று கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். ஜனாதிபதி கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.

கிம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்

"இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்" எனும் கருப்பொருளில் சமூக நீதிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்