கடலால் கனடா செல்ல ஆசைப்பட்டவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்!

Date:

புத்தளத்தில் இருந்து கடல் மார்க்கமாக கனடா செல்ல முயன்றவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி கடல் மார்க்கமாக தப்பி செல்ல முயற்சித்த வேளையில் புத்தளம் கடற்கரை ஓரமாக வைத்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் முகவர்கள் ஊடாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விடுதியொன்றில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து புத்தளத்திற்கு அழைக்கப்பட்டு லொறி ஒன்றில் கற்பிட்டி களப்பிற்கு அருகே அழைத்துச் செல்லப்பட்டு, இறக்கி விடப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் அவர்கள் பயணம் செய்த லொறியும் கைப்பற்றப்பட்டது.

இவர்களில் 9 பேர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள். 6 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். 5 பேர் முல்லைத்தீவையும், 3 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள். லொறி சாரதி புத்தளத்தை சேர்ந்தவர்.

அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தலா 2 ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்