மாவடிப்பள்ளி விபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் பலி!

Date:

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற விபத்தில் வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையை சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ் (31) ஸ்தலத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையிலேயே இவர் நாடுதிரும்பியிருந்தார்.

இன்று மாலை அஸ்ரப் முஹம்மது முனாஸ் வேலை நிமித்தம் சென்று கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் வாகனத்தை செலுத்தியவர்களின் கவனயீனமே விபத்திற்கான காரணமாக உள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்