ஸ்பேஸ் எக்ஸில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்கள் புறப்பட்டனர்!

Date:

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் வழி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் நால்வர் புறப்பட்டுள்ளனர்.

இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து Falcon 9 ஏவுகணையின் ஊடாக விண்வெளிக்குள் பாய்ச்சப்பட்டது.

SpaceX-இன் “Crew-3” விண்வெளிப் பயணம் கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.

விண்வெளி வீரர்களில் ஒருவர் மருத்துவப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கு வானிலை பொருத்தமாக இல்லை என்றும் கூறப்பட்டது.

விண்வெளிப் பயணம், அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வகம், SpaceX நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் ஓர் அங்கம்.

விண்வெளி வீரர்கள், பூமியின் சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்ட நிலையத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்வர்.

அதன் மூலம், வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்