24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 5700 ஏக்கர் பயிர்ச் செய்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2580 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 180 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 560 விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமாக 5700 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. வட மாகாணத்தின் 2 ஆவது மிக பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரை குளத்தில் 11.5 அடி நீர் காணப்படுவதோடு, தற்போது நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதி ஊடாக 4 இஞ்சி அளவில் நீர் வெளியேறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

Leave a Comment