25.5 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

அரசாங்கத்தில் விரக்தியடைந்திருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியை மாற்றாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை: சரத் பொன்சேகா!

தற்போதைய ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ள போதும், ஐக்கிய மக்கள் சக்தியை ஒரு மாற்றீடாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை. வினைத்திறனான பிரச்சார இயந்திரத்தின் மூலம் விரக்தியடைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அடிமட்ட உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகமவில் நேற்று (7) நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் தட்டில் வைத்து அரசியல் வெற்றியை பெற்றுக்கொடுக்காத நிலையில் அதனை நோக்கி உழைக்க வேண்டும் என்றார்.

“தற்போதைய அரசாங்கத்தால் சலிப்படைந்துள்ள போதிலும் அரசாங்கத்தை நடத்தும் திறன் கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் பார்க்கவில்லை. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து வாக்களித்தவர்களில் 50 வீதமானவர்கள் இன்று விரக்தியடைந்துள்ளனர். இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மாற்று என்று அவர்கள் நினைக்கவில்லை, எனவே நாங்கள் எங்கள் பிரச்சார இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக மற்றும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“நல்லாட்சி அரசாங்கம் ஊழல்வாதிகளை சிறைக்குள் அனுப்புவதாக உறுதியளித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் பொது நிதியையும் கொள்ளையடித்தனர். இலங்கையின் முன்னாள் தலைவர்கள் எயார்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையடித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் எயார்பஸ் நிறுவனத்திற்கு பெரும் தொகையை செலுத்தி அதனை ரத்து செய்தது. சில நல்லாட்சி அரசாங்க அரசியல்வாதிகள் 20 மில்லியன் டொலர்களை தங்களுடைய பாக்கெட்டுகளில் போட்டுள்ளனர்.அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களே பொறுப்பு” என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment