நீதியமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையினால், கடுமையான அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே, நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதும் அலி சப்ரி தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில், அலி சப்ரி அளித்த பேட்டியொன்றில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி, அதன் தலைவர் நியமிக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும், தன்னைக் கலந்தாலோசிக்காமல், இதுபோன்ற பணிக்குழுவை நியமித்தது குறித்து தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் கூறியிருந்தார்.
நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி கருதுவதாக தெரியவருகிறது.