சூட்கேசில் இளம்பெண் சடலம்: விபச்சார தொழில் போட்டியால் கொலை?

Date:

சேலத்தில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விபச்சார தொழில் போட்டியின் காரணமாக கொலையா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிபட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப். இவரது மனைவி தேஜ்மண்டல். இந்த பெண் சேலம் மாநகரில் சங்கர்நகர் பேர்லண்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். கணவர் பிரதாப் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த வாரம் சென்னை சென்றுள்ளார்.

இந்த நிலையில், பிரதாப் தனது மனைவி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்காததால் கட்டிட உரிமையாளரிடம் நேற்று தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் வீட்டுக்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியதை அடுத்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது அறையில் மேல் அலமாரியில் சூட்கேசில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகளையும் ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் வீட்டின் அருகே உள்ள அறையில் இருந்து ஆண், பெண் இருவர் தேஜ் மண்டல் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் சென்றதும் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்ததும் தெரியவந்தது. அதன் பிறகு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அந்த இருவர் மீதும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்