வீட்டில் ஏற்பட்ட மின்சாரம் தடையை சரி செய்வதற்காக அழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞன், வீட்டிலிருந்த 8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமியின் தாயார் இலாம்பை சரி செய்து, விளக்கேற்றிக் கொண்டு வருவதற்குள் இளைஞன் மன்மத வித்தை காண்பித்துள்ளார்.
இந்த சம்பவம் பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட 8 வயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வீட்டில் சமையலறையுடன் மற்றுமோர் அறை மட்டுமே உள்ளது. அவ்வீட்டுக்கு தற்காலிக இணைப்பின் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மின்சாரம் கடந்த 12ஆம் திகதி இரவு திடீரென தடைப்பட்டுள்ளது.
மின் தடையை சரி செய்ய, அந்த இளைஞனை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமியின் தாயார்.
சமையலறைக்கு சென்று இலாம்பை பற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அறையின் கட்டலில் படுத்திருந்த சிறுமியை, இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.




