ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரசாங்கம் 12.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இலங்கை திருப்திகரமான அளவில் உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கோவிட் -19 க்கு எதிராக 60 சதவிகித மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதால் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தை அரசாங்கம் மேற்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை கையாளும் போது உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாக்க முடிந்தது. COVID-19 தொற்றுநோயைக் கையாண்டதற்காக நாடு சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.